பரதநாட்டியம்
Friday, May 31, 2013
Thursday, July 28, 2011
த்யானஸ்லோகம்
ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம்
ஸர்வ வான்மயம் ஆஹார்யம் சந்திர
தாராதி தம் நுமஹ் சாத்விகம்
சிவம்
கருத்து :
உலகத்தை உடம்பாகவும் பேசும் பாஷைகள் யாவற்றையும் ஒரே பாஷையாகவும் சந்திர நட்சத்திரங்களை ஆபரணங்களாகவும் அணிந்துள்ள சாந்த ரூபமான சிவனை வணங்குகிறோம்.
நாட்டியக் கிரமம்
யதோ ஹஸ்த ஸ்ததோ த்ருஷ்டிஹி
யதோ த்ருஷ்டிஹி ஸ்ததோ மனக
யதோ மனக ஸ்ததோ பாவஹ
யதோ பாவஹ ஸ்ததோ ரஸஹ
கருத்து :
கைகள் அசையுமிடத்து கண்கள் சேர வேண்டும். கண்கள் சேருமிடத்து மனம் சேர வேண்டும். மனம் சேருமிடத்து பாவம் சேர வேண்டும். பாவம் சேருமிடத்து ரஸம் உண்டாக வேண்டும்.
ஆஸ்யே நாலம் பயே கீதம்
ஹஸ்தே நார்த்தம் ப்ரதர்ஷே
ஷக்ஷீர்ப்யாம் தஷே பாவ
பாதப்யாம் தாளம் ஆதிஷே
கருத்து :
நாட்டியப் பெண் பாடத் தெரிந்தவளாக இருக்க வேண்டும். கருத்தைக் கைகளினால் வெளிப்படுத்த வேண்டும். இரு கண்களினாலும் பாவத்தை வெளிப்படுத்த வேண்டும். இரு கால்களினாலும் தாளப் பிரமாணத்தைக் காட்ட வேண்டும்.
Wednesday, July 27, 2011
புஸ்பாஞ்சலி
விக்னானாம் நாஷனம் கர்தும் பூதானாம் ரக்ஷனாயச்ச
தேவானாம் துஷ்டயே சாபி ப்ரேக்ஷகானாம் விபூதையே
ஸ்ரஸசே நாயகஸ் யாத்ர பாத்ர சம்ரக்ஷ நாயச்ச
ஆச்சர்ய ஷிக்ஷா ஷிக்யர்தம் புஸ்பாஞ்சலி மதாரபேத்
கருத்து :
இடையூறுகளை அழிப்பதற்காகவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்க்காகவும், தேவர்களை மகிழ்விப்பதற்க்கும், பார்வையாளர்களுடைய செழிப்பிற்கும், நாட்டியக் குருவினுடைய தலைவரின் நன்மைக்கும், நடிகையின் பாதுகாப்பிற்கும், ஆசானுடைய கல்வி சித்திக்காகவும் மலர் தூவி அஞ்சலி செய்ய வேண்டும்.
அரங்க தேவஸ் துதி
பரத குல பாக்ய கலிகே
பாவ ரஸானந்த பரினதாகரே
ஜக தேக மோகன கலே
ஜய ஜய ரங்காதி தேவதே தேவி
கருத்து :
பரத குலத்திற்கு அதிஷ்டம் தருபவளே பாவம், ரஸம் ஆகியவற்றால் ஏற்படும் ஆனந்தம் பரிணமித்த உருவம் உடையவளே உலகம் முழுவதும் கவரத்தக்க ஒரேயொரு கலையாக இருப்பவளே வெற்றி வெற்றி அரங்கத்தின் தேவிக்கு.
Subscribe to:
Posts (Atom)